வேலூர் கலாஸ்பாளையத்தில் ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி மண்டலாபிஷேக நிறைவு விழா – பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

வேலூர் மாவட்டம் கலாஸ்பாளையம் அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி கோயிலில், சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டலாபிஷேக நிறைவு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த விழா 09 மார்ச் 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறும். இதில், ஸ்ரீ வீரபத்திரர், விநாயகர், முருகர், சோழவரத்து தஞ்சியம்மன், சப்தமாதாக்கள் மற்றும் நவகிரஹமூர்த்திகளுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி மேளதாளத்துடன் திருவீதியுலா நடைபெறுகிறது.

விழாவில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சர்வலோக பைரவ சித்தர் லோகநாத சுவாமிகள் (உள்ளி மதுரா, கம்மவாரம்பட்டி கிராமம்) மற்றும் திரு.ஸ்ரீ கன்னிகேசவ சுவாமிகள் (ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆம்பூர்) ஆகியோர் பங்கேற்று ஆசியுரை வழங்க உள்ளனர். மேலும், கவிஞர் முனைவர் திரு. வாரியார்தாசன் (@) இலக்குமிபதி “தொழுதகை, துன்பம் துடைப்பாய் வீரபத்திரா” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக:

திரு. N. பத்மநாப முதலியார் – தர்மகர்த்தா, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சுலாஸ்பாளையம்

திரு. J. ஸ்ரீதர்

கவிஞர் திரு. S.K.M. மோகன்

இம்பீரியல் பஸ் அதிபர், திரு. U.V.R. ராஜ்குமார் (தினத்தந்தி நிருபர்)

ஸ்ரீ ஆதிபராசக்தி பீடம் மண்டலாபிஷேகம் நடத்துபவர் சிவஸ்ரீ. K.M. ரவிச்சந்திர சிவாச்சாரியார் (ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம், வேலூர்)


விழா நிறைவில், பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும்.

ஸ்ரீ வீரபத்திரர் கோயில் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் கலாஸ்பாளையம் தேவராஜ் நகர் பேட்டைவாசிகள் விழாவை சிறப்பாக நடத்தி, பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

— திரு. ப. பத்மராஜ், தர்மகர்த்தா, ஸ்ரீ வீரபத்திரர் கோயில் நிர்வாகிகள்.

City Today News 9341997936

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.