
பெங்களூரு, அக்டோபர் 15, 2025:
தீபாவளி கொண்டாட்ட காலத்தில் குழந்தைகளின் கண் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில்,வாஸன் ஐ கேர் நிறுவனம் 15 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கான இலவச கண் ஆலோசனை முகாமை அறிவித்துள்ளது. பட்டு வெடிப்பால் ஏற்படும் கண் காயங்களுக்கு சிறப்பு கவனம் வழங்கும் இந்த முகாம் அக்டோபர் 15 முதல் 24, 2025 வரை அனைத்து வாஸன் ஐ கேர் கிளைகளிலும் நடைபெறும்.
துவக்க நிகழ்ச்சி வாஸன் ஐ கேர் மருத்துவமனை, ராஜாஜிநகர் கிளையில் நடைபெற்றது. இதில் டாக்டர் தேவாஷிஷ் துபே, டாக்டர் தேவிகா சிங், டாக்டர் அர்ச்சனா கமலாபுர்கர், டாக்டர் புத்தசாமி பி., மற்றும் டாக்டர் இ. எல். என். முர்த்தி கலந்து கொண்டனர்.
“பட்டாசு வெடிப்பினால் குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்பட்டால், உடனடி சிகிச்சை மிக அவசியம். எங்கள் மருத்துவர்கள் அனைத்துக் கிளைகளிலும் இத்தகைய அவசர நிலைகளைக் கையாள தயாராக உள்ளனர்,” என வாஸன் ஐ கேர் நிறுவனத்தின் மூத்த கண் நிபுணர் தெரிவித்தார். மேலும், தீபாவளியை பொறுப்புடன் கொண்டாடவும், கண்களில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் உடனே நிபுணர்களை அணுகுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த முயற்சி வாஸன் ஐ கேர் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வையும், அவசர சிகிச்சை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் முயற்சியையும் பிரதிபலிக்கிறது.
உதவி அல்லது மேலதிக தகவல்களுக்கு, உங்களுக்குச் அருகிலுள்ள வாஸன் ஐ கேர் மையத்தைப் பார்வையிடவும், அல்லது இலவச தொலைபேசி எண் 1800 571 3333-ஐ அழைக்கவும்.
City Today News 9341997936
