கலாஸ்பாளையம் அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் மயிலார் உற்சவம்-பக்தி வெள்ளத்தில் மூழ்கிய வேலூர்.

வட ஆற்காடு மாவட்டத்தின் வேலூர் நகரில் கலாஸ்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் கடந்த 47 ஆண்டுகளாக பக்தர்களின் ஆன்மீக மையமாக இருந்து வருகிறது.

இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மயிலார் உற்சவம் இந்த ஆண்டும் கடந்த ஜனவரி 22ஆம் தேதி திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடிய நிலையில், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மங்கள தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் சிவா கைலாய மேளதாள ஒலியுடன் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உற்சவத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீதி உலா நடைபெற்றபோது பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடி, ஆரத்தி எடுத்தும் உற்சவரை வரவேற்றனர். மயிலார் உற்சவம் ஆண்டுதோறும் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக விளங்கி வருகிறது.

இந்நிகழ்வுகள் குறித்து ஆலய தர்மகர்த்தா P. பத்மராஜ் தெரிவித்ததாவது: “கலாஸ்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்தில் மயிலார் உற்சவம் கடந்த 47 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற விழாவிலும் பக்தர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர். எதிர்காலத்திலும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் விழாக்களை மேலும் சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.

City Today News -9341997936