வாசன் கண் மருத்துவமனை நடத்தும் “கண்புரை மற்றும் லேசிக் பரிசோதனை சிறப்பு முகாம்” – ஜூலை 25 முதல் 31 வரை

பெங்களூரு,ஜூலை 24, 2025 – இந்தியாவில் கண்புரை நோய் காரணமாக பார்வை இழப்போர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. பார்வை இழப்பின் முக்கியமான காரணிகளில் ஒன்று கண்புரை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, வாஸன் கண் மருத்துவமனை சார்பில் ஜூலை 25 முதல் 31 வரை “கண்புரை மற்றும் லேசிக் பரிசோதனை சிறப்பு முகாம்” நடைபெறுகிறது.

அறுவை சிகிச்சையே ஒரே தீர்வு

கண்புரைக்கென தனியாக மருந்தோ, ஊசியோ கிடைப்பதில்லை. பார்வையை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி அறுவை சிகிச்சைதான். ஆனால், மக்களில் இதற்கான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனை தீர்க்கும் முயற்சியாக, இலவச பரிசோதனை முகாம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில்:

2001-ல் கண்புரை காரணமாக பார்வை இழந்தோர்: 33.8 லட்சம்

2020-ல் இது 76.3 லட்சமாக உயர்ந்துள்ளது

ஒரே ஆண்டில் சிகிச்சை பெற்றோர் (ஒரு லட்சத்திற்கு):

2001 – 24,025 பேர்

2020 – 27,817 பேர்



முகாம் முக்கிய அம்சங்கள்:

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச கண்புரை பரிசோதனை

20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு லேசிக் / கான்டூரா பரிசோதனை

ரூ.5,000 மதிப்பிலான பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் தேவையான மருந்துகள் இலவசம்

அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் 10% தள்ளுபடி

கண் மாடல்களுக்கு 15% தள்ளுபடி

இலவச மருத்துவர் ஆலோசனை


அரசு காப்பீட்டுத் திட்டங்களுக்கு ஏற்ற மருத்துவமனை

வாசன் கண் மருத்துவமனை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனையாகும். எனவே, அரசு மற்றும் தனியார் காப்பீட்டு அட்டை வைத்திருப்போர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவலுக்கு தொடர்பு கொள்ள:

அருகிலுள்ள வாஸன் கண் மருத்துவமனை கிளையில் நேரில் வருகை தரலாம்.

மேலும் தகவலுக்கு தொடர்புகொள்ளவும்:
சாம்பு கவுடா
மொபைல்: +91 99648 76883

City Today News 9341997936