
2024 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வித்யாதன் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
கல்வி, வரம்பற்ற சாத்தியங்களை திறக்கும் திறவுகோல் ஆகும். Shibulal Family Philanthropic Initiatives (SFPI) உடைய சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை (SDF) தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கான வித்யாதன் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது. 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் வித்யாதன் உதவித்தொகை திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த திறன் பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளுக்கான ஆலோசனைகள் வழங்குகிறது. 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் 2017- ஆம் ஆண்டு புதுச்சேரியில் தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 1158 மாணவர்கள் தாங்களின் விருப்பமான பட்டப்படிப்பை முடிக்க வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பயில்வோர்க்கான வித்யாதன் கல்வி உதவித்தொகை பெறும் திட்டம்- 2024,
இந்த உதவித்தொகை பெறும் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் கீழ் பெறும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பயன் பெறுவார்கள். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 80 சதவீதத்திற்கு மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 60 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிப்பின் போது ஆண்டுக்கு ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு, பட்டப் படிப்பைத் தொடர ஆண்டுக்கு ரூ. 15,000 முதல் ரூ. 75,000 வரை உதவித்தொகையாக வழங்கப்படும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் http://www.vidyadhan.org என்னும் இணையதள முகவரிக்கு சென்றும் அல்லது SDF VIDYA என்ற செயலியை (Google Play store இல் கிடைக்கும்) தரவிறக்கம் செய்தும் ஜூலை 15, 2024க்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். மேலும் கேள்விகளுக்கு,
தயவுக்கூர்ந்து vidyadhan.puducherry@sdfoundationindia.com vidyadhan.tamilnadu@sdfoundationindia.com,
அனுப்பலாம் அல்லது +91 9663517131 (Help Desk) என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.
City Today News 9341997936

You must be logged in to post a comment.