
இந்தியாவிலியே முதலாவது சிவாலயம் ஓம் நமசிவாயா நமஹ: ஓம் நமசிவாய நமஹ:
ஸ்ரீ பரசுராமேஸ்வர சுவாமி தேவஸ்தானம் – குடிமள்ளம்
2600 வருட மிகப்பழம் பெருமை வாய்ந்த உலகப்புகழ்பெற்ற கோவிலில் “ஏக சிலையின் மீது மும் மூர்த்திகளாக பிரம்மா – யக்ஷ ரூபம், விஷ்ணு – பரசுராம அவதாரம், சிவன் – மனித ஆண்லிங்க வடிவ”த்துடன் சுவர்னமுகி நதிக் கரையில் எழுந்தறிளியுள்ளது ஆச்சர்யம், அற்புதம்.
கர்பாலயம் சிவலிங்க வடிவத்திலும், கோபுரம் யானை வடிவத்திலும் இருப்பது விசேஷம். மூலவிராட் பூமியின் புறபரப்லிருந்து ஆறு அடிகள் பள்ளத்தில் உள்ளமையால் குடிபள்ளம் என்ற இருக்கிராமம் நாளடைவில் குடிமள்ளம் என அழைக்கப்பட்டது.
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை சுவர்னமுகி நதிதீர்த்தம் சுவாமியை தொடுகிறது அவ்வாறாக 2005, டிசம்பர் 4 ஆம் தேதி இதுபோன்று தண்ணீர் சுவாமியை அபிஷேகித்தது. உத்தராயனத் திலிருந்து தக்ஷணாயத்திற்கு மாறும்போது சூரிய கதிர்கள் மூலவிராட்டை தொடுகின்றன.
ஸ்ரீ ஆனந்த வள்ளியாக (பார்வதி தேவி), ஸ்ரீவள்ளி மற்றும் தேவயானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் மேலும் சூர்ய பகவானின் ஆலயங்களும் இதே வளாகத்தில் அற்புதமாக எழுந்தறிளியுள்ளன. பக்தர்களின் கோரிக்கைளை தீர்க்கும் அற்புத தெய்வமாக உள்ளதால் இக்கோவிலுக்கு வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்து பக்தர்கள் இறைவனின் அருளை பெறுகின்றனர்.
ஸ்ரீ ஆனந்தவள்ளி (பார்வதி) அம்மனுக்கு பிரதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை அபிஷேகம் மற்றும் 10.00 மணி முதல் 11.00 மணி வரை விஷேச கும்குமார்ச்சனை நடைபெறும், டிக்கெட் ரூ. 20/-
திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் சுபம் நடைபெறும்.
“ஓம் நமசிவாயா நமஹ: ஓம் நமசிவாய நமஹ:”🙏🙏🙏
City Today News 9341997936

You must be logged in to post a comment.