கலாஸ்பாளையம் ஸ்ரீவீரபத்திர சுவாமி ஆலயத்தில் தஞ்சம்மாள் 13-ம் ஆண்டு உற்சவம் கோலாகலம்

வேலூர்: கலாஸ்பாளையம் அருள்மிகு ஸ்ரீவீரபத்திர சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு தஞ்சம்மாள் அம்மனின் 13-ம் ஆண்டு உற்சவம் பக்தர்கள் திரளுடன் சிறப்பாக நடைபெற்றது.

உற்சவத்தையொட்டி காலை 7.15 மணிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9.02 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கரகம் திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து கஞ்சி வார்த்தல் மற்றும் மங்கள தீபாராதனை நடைபெற்றன. மாலை 3 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் தஞ்சியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
விழாவில் ஓம் கைலாய சிவசித்தர் அம்மையார், ஓம் ஸ்ரீ சௌடாம்பிகை பாலா திரிபுரசுந்தரி பீடத்தைச் சேர்ந்த அருளாளர்கள், கண்ணமங்கலம் பொன்னை ஆட்கொண்ட சிவபெருமான் கோயிலைச் சேர்ந்தவர்கள் மற்றும் தவத்திரு திலிப்சுவாமிகள் உள்ளிட்ட சிறப்பு அருளாளர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

இந்த ஆண்டு கரகத்தை G. சீனிவாசன், S. பிரதீப்குமார் மற்றும் S. செல்வகுமார் ஆகியோர் எடுத்துச் சென்றனர். கோயில் பூசாரிகள், உபயதாரர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் இணைந்து உற்சவப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
விழாவையொட்டி உற்சவர் பூஷ்ப அலங்கார சாத்துபடியை JCB ஜெகதீசன்–மகேஸ்வரி குடும்பத்தினர், சுவாமி அலங்கார சாத்துபடியை U.V.R. ராஜ்குமார், U.V.R. ஜூவல்லர்ஸ், வேலூர், உற்சவர் அபிஷேகத்தை N. குமார்–உஷா குடும்பத்தினர், கரகம் பூ உபயத்தை P. பத்மராஜ்–கலாவதி குடும்பத்தினர் வழங்கினர்.
மேலும், அம்மன் வஸ்திரத்தை R.V. கோட்டீஸ்வரி ராமஜெயம், மண்குடங்களை S. ரவி–ராணிகலா, பால் உபயத்தை V.M. பாலகிருஷ்ணன், ஸ்ரீ லட்சுமி ஆட்டோ பைனான்ஸ், வேலூர், பிரசாதத்தை S. விஜயகுமார்–மாலதி குடும்பத்தினர், அன்னதானத்தை V.M.K. வெங்கடேசன் & பிரதர்ஸ் ஆகியோர் வழங்கினர்.
ஒலி, ஒளி அமைப்பை M. ராஜேஷ், சிட்டி ஆப்டிக்கல்ஸ், வேலூர், பந்தல் அமைப்பை K. ரமேஷ்–தாமரைசெல்வி, சாய்நாதபுரம், பத்திரிக்கை உபயத்தை K. ராமலிங்கம் CMC–R. குமாரி குடும்பத்தினர், கலாஸ்பாளையம் ஆகியோர் மேற்கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீவீரபத்திர ஆலய நிர்வாகஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் ஸ்ரீவீரபத்திர ஆலய நிர்வாக இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

தர்மகர்த்தா P. பத்மராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலாஸ்பாளையம், தேவராஜ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவம் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.
City Today News 9341997936

You must be logged in to post a comment.