பேறுகால நீரிழிவு தொடர்பான தமிழ் ஃபேஸ்புக் நேரலை

சென்னை:

“உங்கள் ஆரோக்கியம், உங்கள் கேள்விகள்” (#YourHealthYourQuestions) என்ற தலைப்பில் தமிழில் பேஸ்புக் நேரலை தொடரின் மூன்றாம் பாகமாக, பேறுகால நீரிழிவு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி 21 பிப்ரவரி, 2022 அன்று மாலை மணிக்கு நடைபெறவுள்ளது.

கர்ப்பிணி பெண்களை குழப்பத்திற்குள்ளாக்கும் பேறுகால நீரிழிவு தொடர்பான கேள்விகளுக்கு இந்த நேரலையில் பதிலளிக்கப்படும்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் உடல்நலம் தொடர்பான தங்களது சந்தேகங்களை போக்கிக்கொள்ள இந்த நேரலை ஒரு வாய்ப்பாகும்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் சமூகத்தினரிடையே பெண்களின் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சுகாதாரத் தகவல்கள் வழங்கப்படுவதில் இருக்கும் மொழித் தடையை உடைப்பதும் தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

சர்வதேச மகப்பேறு மருத்துவர் மற்றும் மகப்பேறியல் மருத்துவர்களின் கூட்டமைப்பு (FIGO) வெல் வுமன் ஹெல்த்கேர் தலைவரும் திவாகர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநருமான டாக்டர் ஹேமா திவாகரால் மேற்கொள்ளப்படும் முயற்சி இதுவாகும்.

இந்த தொடர் ஆர்ட்டிஸ்ட் ஃபார் ஹர் என்ற அமைப்பால் தொடங்கப்பட்ட “ஹெல்த் ஃபார் ஹெர்” என்கின்ற சிறப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். திவாகர்ஸ் சர்வீஸ் டிரஸ்டின் ஆதரவுடன், டாக்ஸ்பேஸ்பிளஸ் உடன் இணைந்து இது செயல்படுகிறது.

டாக்டர் ஹேமா திவாகர் வழிகாட்டுதலுடன் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் ஃபோக்சி அமைப்பின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான டாக்டர் சம்பத் குமாரி மற்றும் திவாகர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இணை ஆலோசகர் டாக்டர் பூர்ணி நாராயணன் ஆகியோர் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

15 நாட்களுக்கு ஒருமுறை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர், பெண்களின் ஆரோக்கியம் குறித்து நிலவி வரும் கட்டுக்கதைகளையும் தவறான எண்ணங்களையும் போக்க வழி வகை செய்யும்.

வரவிருக்கும் வாரங்களில், மாதவிடாய், மகப்பேறு ஆகியவை தொடர்புடைய பல்வேறு தலைப்புகள் பேசப்படும். நோயைத் தடுப்பதற்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுக்க சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்த நிகழ்ச்சி ஊன்றுகோலாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில் சிறந்த தேசிய நிபுணர்கள் இடம் பெறுவார்கள், அவர்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சிக்கல்கள் குறித்து தமிழில் பேசுவார்கள். மற்ற இந்திய மொழிகளிலும் விரைவில் இந்த தொடர் கிடைக்கும்.

ஃபேஸ்புக் நேரலைக்குப் பிறகு, HealthforHer செயலியில் (Google Play Store & IOS) மருத்துவ நிபுணர்களிடம் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம்

ஃபேஸ்புக் லைவ் வெளியீட்டுத் தேதி: 21 பிப்ரவரி, 2022 – மாலை 5 மணி. நேரலையைப் பார்ப்பதற்கான இணைப்பு: facebook.com/DocSpacePlus

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:

டாக்டர் ஹேமா திவாகர்
ஆலோசகர் மற்றும் மருத்துவ இயக்குநர்
திவாகர்ஸ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பெங்களூரு
தலைவர் FOGSI 2013
ஒருங்கிணைப்பு தலைவர் AICOG 2019
தலைமை நிர்வாக அதிகாரி – ஆர்ட்டிஸ்ட் ஃபார் ஹர் (திறன் பரிமாற்றத்திற்கான ஆசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்)
FIGO க்கான FOGSI தூதர் (சர்வதேச மகளிர் மற்றும் மகப்பேறியல் நிபுணர்களின் கூட்டமைப்பு)
தொலைபேசி: 9844046724 | மின்னஞ்சல்: drhemadivakar@gmail.com

City Today News

9341997936